Publishers of popular books from Chromepet, Chennai-44, Tamilnadu, South India, India, Asia.
Saturday, 30 August 2014
Thursday, 31 July 2014
எமது பாடல் தொகுப்புக்கள்
எமது பாடல் தொகுப்புக்கள்
அம்மன் பாடல் தொகுப்புகள்.துர்கையின் துதிப்பாடல்கள் - 1
துர்கையின் துதிப்பாடல்கள் - 2
துர்கையின் துதிப்பாடல்கள் - 3
துர்கையின் துதிப்பாடல்கள் - 4
ஐயப்பன் பாடல் தொகுப்புகள்
பஜனைப் பாடல்கள் - 1
பஜனைப் பாடல்கள் - 2
ஐயப்பன் மெல்லிசைப் பாடல்கள்
பஜனைப் பாடல்கள்(கையடக்கப் பதிப்பு)
ஐயப்பன் தினசரி வழிபாடு(கையடக்கப் பதிப்பு)
முருகன் பாடல்கள்
தித்திக்கும் திருப்புகழ்(கையடக்கப் பதிப்பு)
காவடிப் பாட்டு
முருகன் அருட்பாடல்கள்
ஆறுபடை வீடுகளின் கந்தர்சஷ்டி கவசங்கள்
பரிபூஜன பஞ்சாமிர்தம்
ஸ்தோத்ரமாலா நூல்கள்
விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்(உரையுடன்)
வாராஹி ஸ்தோத்ரமாலா
ப்ரத்யங்கிரா ஸ்தோத்ரமாலா
லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்தோத்ரமாலா
லக்ஷ்மி நரசிம்மர் ஸ்தோத்ரமாலா
சந்தான கோபால ஸ்தோத்ரமாலா
நலமும் வளமும் தரும் நரசிம்மர் ஸ்தோத்ரமாலா
தன்வந்தரி ஸ்தோத்ரமாலா
தேவி ஸ்தோத்ரமாலா
நவக்ரஹ ஸ்தோத்ரமாலா
உணவே மருந்தாய்க் கொள்வீரே!
உணவே மருந்தாய்க் கொள்வீரே!
மருந்தே உணவாய் மாறிடுமென்றால்
மயக்கம் கொள்ளத் தேவையில்லை
மருந்தும் உணவும் ஒன்றென அறிந்தால்
உறக்கம் பற்றிய கவலையில்லை.
புறமும் அகமும் நோயின்றிருக்க
உணவை மருந்தாய்க் கொள்வீரே!
மருந்தும் மருத்துவர் மாண்பும் அறிந்தவர்
அறிவில் சான்றோர் என்றறிவீரே!
Wednesday, 11 June 2014
நங்கை நல்லூர் ஆஞ்சநேயா
நங்கை நல்லூர் ஆஞ்சநேயா
நங்கை நல்லூர்* ஆஞ்சநேயா
ஸ்ரீராமபக்த ஹனுமானே!
எங்கெல்லாமோ தேடி அலைந்தேன் - நிம்மதியை
உன்னடியில் கண்டு கொண்டேன். 1
துன்பங்களைக் காண்கையிலே என் நெஞ்சில்
சோகம் வந்து அழுத்துதையா
உன்னை வந்து பார்க்கையிலே - அனைத்தும்
ஓடிப்போய் ஒளிந்ததையா. 2
வாழ்க்கையதன் ஓரத்திலே நான்
பாதை தெரியாது நின்றேன்
வீழ்த்தும் மதிமாந்தர் முன்னே - எங்கிருந்தோ
ஓடி வந்து காத்து நின்றாய். 3
எண்ணி எண்ணிப் பார்க்கையிலே என்னெஞ்சில்
எங்கும்நீ நிறைந்திருந்தாய்
உன்னையன்றி யாரிடமே என் குறையை
சொல்லிச் சொல்லி மாய்ந்திடுவேன்? 4
சீதையவள் சோகத்திலே
ஸ்ரீலங்கைதனில் இருக்கையிலே
பாதைதன்னைக் காட்டி விட்டாய் - ஸ்ரீராமன்
சொன்ன சேதி சேர்த்து விட்டாய். 5
வெஞ்சிறையில் வெந்து விட்டேன் வாழ்க்கை
பந்தமதில் நொந்து விட்டேன்.
தஞ்சமென உன்னையடைந்தேன் - நீயே
நல்ல வழி காட்டிடுவாய். 6
கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்து விட்டேன் - என்
நெஞ்சத்தையே திறந்து வைத்தேன்.
அஞ்சனையின் மைந்தனே நீ - சொல்லையா
என்று வந்து காத்திடுவாய்? 7
*'நங்கை நல்லூர்' என்ற இடத்தில் உங்கள் ஊர் பெயரை வைத்துப் பாடலாம்.
சான்று : 'அல்லிக்கேணி ஆஞ்சநேயா', 'நாமக்கல் ஆஞ்சநேயா'. 'தில்லிநகர் ஆஞ்சநேயா'...
Monday, 19 May 2014
ஹோம, விரத, பூஜை சாமான் பட்டியல் (விவாஹம் மற்றும் நலங்கு பாடல்கள் அடங்கியது )
ஹோம, விரத, பூஜை சாமான் பட்டியல்
(விவாஹம் மற்றும் நலங்கு பாடல்கள் அடங்கியது )
ரூ 45.00
ரூ 45.00
இந்த நூலில் 26 பட்டியல்கள் கொடுக்கப் பட்டுள்ளன. என்னென்ன சாமான்கள் எவ்வளவு அளவு வாங்க வேண்டும் என்பதுடன், சுருக்கமாக அந்தந்த பூஜை, ஹோமம், விரதம் மற்றும் கல்யாணம் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்வதென்பதும் குறிப்பிடப் பட்டுள்ளது.
முக்கியமாக கல்யாணத்தின் போது பாடப்படும் நலங்கு பாடல்கள் இதில் உள்ளன.
Wednesday, 16 April 2014
Monday, 24 March 2014
Book Mark Kavithaigal
புக் மார்க் அச்சிடுவது என்ற பழக்கம்
தற்செயலாக ஏற்பட்டது. ஒருமுறை எங்கள் பயனீர் பப்ளிகேசன்க்காக சில நூல்களின்
அட்டை அச்சிட வேண்டியிருந்தது. அதற்கான முயற்சியில் ஈடுபடிருந்தபோது ஒரு
சிறிய செவ்வகப் பகுதி மிச்சமாகி விட்டது. அதற்கான வடிவத்தை இம்போஸ் செய்து
கொண்டிருந்த கனிப்பொறியாளர் , "அதை ஒன்னும் செய்ய செய்ய முடியாது, வேஸ்ட்
தான்" என்றார். அந்த வெற்றுப் பகுதியை நிரப்புவதற்காக சில 'புத்தக அடையாள
துண்டுகள்' (அதுதாங்க... 'புக் மார்க்') சிலவற்றை உருவாக்கினேன்.
நாளடைவில்
மிச்சமாகும் பகுதிகளுக்காக உருவாகிய புக் மார்க்குகளும் அவற்றில் வெளியான
கவிதைகளும் பிரபலமாயின. அவற்றைப் படித்து மயங்கி, ஒரு பள்ளிக்
கூடத்தில்(மகரிஷி வித்யா மந்திர், சேப்பாக்கம்) என்னை பேசக்
கூப்பிட்டார்கள் என்றால் பாருங்களேன்!
சமீபத்திலும் அப்படி ஒரு சோதனை ஏற்பட்டது. அஅப்போது நான் எழுதிய 'புக் மார்க் கவிதை'களில் சில கீழே...
கவிதை 1.
நூலின் பெயர் : வாழ்வில் வளம் சேர்க்கும் வைணவத் தளங்கள்(விலை ரூ. 240)
பாற்கடலில் பாம்பணையில்
பள்ளி கொண்ட பெருமாளே
ஏற்றமிகு ஏந்தலே ரங்கமன்னார்.
போற்றியுனைப்
பாடும் சீரடியார் வாழ்வினிலே என்றும்
ஏற்றம் நிலைத்திருக்கச் செய்.

நூலின் பெயர் : அருளும் பொருளும் தரும் அன்னை சக்தி ஆலயங்கள்(விலை ரூ. 200)
அன்னை சக்தி அன்பின் வடிவம்
மண்ணைக் காப்பாள் மரபைக் காப்பாள்.
கன்றைப் பசு போல் காத்தருள் செய்வாள்
என்றும் நிழலாய் அருகில் இருப்பாள். கவிதை 3.
நூலின் பெயர் : சீரும் சிறப்பும் மிக்க சிவாலயங்கள் (விலை ரூ. 200)
பாகம் அளித்தானை
பார்வதியின் மணாளனை
ஏகாம்பரநாதன் என்றானை
மோகம் அழித்து முன்வினை தீர்த்தானை
நாளும் துதி பாடிடு.
கவிதை 4.
நூல்களின் பெயர் : பலன் தரும் பத்ரி கேதார் யாத்திரை (விலை ரூ. 80)
வரங்கள் பல தந்தருளும் வடநாட்டுத் தளங்கள்(விலை ரூ. 75)
வித்தகனாம் விண்ணவனாம்
சூழ்கடலின் நாயகனாம்
மத்தகத்தின் மறுபிறப்பு ஈந்தவனாம்.
மேதினியில்
அத்தனையும் அறிந்தவனாம்
அழகுடைய நாயகனாம்
பத்ரிநாதன் புகழ் பாடு.
Tuesday, 18 February 2014
Subscribe to:
Posts (Atom)