Monday 24 March 2014

Book Mark Kavithaigal

புக் மார்க் அச்சிடுவது என்ற பழக்கம் தற்செயலாக ஏற்பட்டது. ஒருமுறை எங்கள் பயனீர் பப்ளிகேசன்க்காக சில நூல்களின் அட்டை அச்சிட வேண்டியிருந்தது.  அதற்கான முயற்சியில் ஈடுபடிருந்தபோது ஒரு சிறிய செவ்வகப் பகுதி மிச்சமாகி விட்டது.  அதற்கான வடிவத்தை இம்போஸ் செய்து கொண்டிருந்த கனிப்பொறியாளர் , "அதை ஒன்னும் செய்ய செய்ய முடியாது, வேஸ்ட் தான்" என்றார். அந்த வெற்றுப் பகுதியை நிரப்புவதற்காக சில 'புத்தக அடையாள துண்டுகள்' (அதுதாங்க... 'புக் மார்க்') சிலவற்றை உருவாக்கினேன். 

நாளடைவில் மிச்சமாகும் பகுதிகளுக்காக உருவாகிய புக் மார்க்குகளும் அவற்றில் வெளியான கவிதைகளும் பிரபலமாயின. அவற்றைப் படித்து மயங்கி, ஒரு பள்ளிக் கூடத்தில்(மகரிஷி வித்யா மந்திர், சேப்பாக்கம்) என்னை பேசக் கூப்பிட்டார்கள் என்றால் பாருங்களேன்!
சமீபத்திலும் அப்படி ஒரு சோதனை ஏற்பட்டது. அஅப்போது நான் எழுதிய 'புக்  மார்க் கவிதை'களில் சில கீழே...



கவிதை 1.

நூலின் பெயர் : வாழ்வில் வளம் சேர்க்கும் வைணவத் தளங்கள்(விலை ரூ. 240)

பாற்கடலில் பாம்பணையில்
பள்ளி கொண்ட  பெருமாளே
ஏற்றமிகு ஏந்தலே ரங்கமன்னார்.
போற்றியுனைப் 
பாடும் சீரடியார் வாழ்வினிலே என்றும் 
ஏற்றம் நிலைத்திருக்கச் செய்.

கவிதை 2.

நூலின் பெயர் : அருளும் பொருளும் தரும் அன்னை சக்தி ஆலயங்கள்(விலை ரூ. 200)

அன்னை சக்தி அன்பின் வடிவம்
மண்ணைக் காப்பாள் மரபைக் காப்பாள்.
கன்றைப் பசு போல் காத்தருள் செய்வாள்
என்றும் நிழலாய் அருகில் இருப்பாள். 

கவிதை 3.

நூலின் பெயர் : சீரும் சிறப்பும் மிக்க சிவாலயங்கள் (விலை ரூ. 200)

பாகம் அளித்தானை 
பார்வதியின் மணாளனை 
ஏகாம்பரநாதன் என்றானை 
மோகம் அழித்து முன்வினை தீர்த்தானை 
நாளும் துதி பாடிடு.

கவிதை 4.

நூல்களின் பெயர் : பலன் தரும் பத்ரி கேதார் யாத்திரை (விலை ரூ. 80)
                                      வரங்கள் பல தந்தருளும் வடநாட்டுத் தளங்கள்(விலை ரூ. 75)

வித்தகனாம் விண்ணவனாம் 
சூழ்கடலின் நாயகனாம் 
மத்தகத்தின் மறுபிறப்பு ஈந்தவனாம்.
மேதினியில்
அத்தனையும் அறிந்தவனாம் 
அழகுடைய நாயகனாம் 
பத்ரிநாதன் புகழ் பாடு.