Thursday, 26 December 2013

வாசகர்கள் வாங்கும் நூல்களுக்குப் பதிப்பகங்கள் அதிகம் தள்ளுபடி தர வேண்டுமா?

'வாசகர்கள் வாங்கும் நூல்களுக்குப் பதிப்பகங்கள் அதிகம் தள்ளுபடி தர வேண்டுமா?' என்ற கேள்வி ஒவ்வொரு சென்னை புத்தகக் கண்காட்சி  துவங்கு முன்னரும் எழுகிறது.

எனக்கு நிஜமாகவே புரியவில்லை! ஒரு சினிமாவுக்கு டிக்கெட் வாங்கும் போதோ, ஒரு உணவு விடுதிக்குப் போகும்போதோ,  தன் பிள்ளைகளுக்கு இன்ஜினியரிங் சீட் வாங்க முனையும்போதோ இந்த கேள்வியை ஒரு தமிழன் கேட்பதில்லை. ஆனால், ஏழேழு தலைமுறைக்கும் தொடர்ந்து பயனளிக்கும் 'நூல் வாசிப்பு' என்று வரும்போது மட்டும் மறக்காமல் இதைக் கேட்கிறான்.

நான் தமிழன் என்று பெருமைப்படுவதா அல்லது சிறுமைப் படுவதா?

இதற்க்குப் பதிப்பாளர்கள் சிலரும்  காரணம் என்று நினைக்கிறேன். போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடியைத் தர வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள். கீழ் கண்ட காரணங்கள் அவற்றில் சில.

  1. அரசு நூலகங்களுக்குத் தங்கள் நல்ல நூல்கள் தேர்வு செய்யப்படாமை, 
  2. சில புத்தக விற்பனையாளர்கள் வாங்கிய நூல்களுக்கான பில் தொகையை ஆண்டுக் கணக்கில் தராமலே அலைக்கழித்தல்.
  3. ஒரு நல்ல நூலைப் பல காலம் உழைத்து தயாரித்து, உருவாக்கி, வெளியிட்டு சந்தையை உருவாக்கிய பிறகு, சுலபமாக  அதே நூலை வாங்கி சாம்பிள் ஆகக் கொடுத்து வேறு தலைப்பில் வேறு  ஒருவரை வைத்து எழுதி வெளியிடும் பதிப்பாளர்கள்.
இவை தவிர வேறு பல காரணங்களும் இருக்கலாம்! ஆனால், தமிழனின் நிலை இப்படித்தான் இருக்கும் என்றால், என் மூன்றாம் தலைமுறையைத் தமிழறியாமலே  வளர்த்து விடலாமா என்று தோன்றுகிறது.
அவ்வளவு வெறுப்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment