Tuesday 17 March 2015

Mallaji's mathippurai- Shraatha prayogam

மல்லாஜி இரத்தின சர்மா அவர்களின் 'ஸ்ராத்த பிரயோகம்' என்ற நூலின் மதிபுரையிளிருந்து...

 உலகில் நாகரிகம் வளர வளர மனிதன் வாழும் விதமும் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் தாய் தந்தையரை நம்பி இருந்தபோது அவர்கள் மேலிருந்த மரியாதை காரணமாக 'பித்ரு கர்மாக்களை'க்  குறைவின்றிச் செய்யும் பழக்கம் அக்கால மனிதர்களுக்கு இருந்தது. நாளடைவில் தாய்-தந்தையர் மேலிருந்த மதிப்பு மட்டும் நின்று பொய், அவர்கள் மேலிருந்த பிடிப்பும் அகன்றுவிட, 'பித்ரு கர்மா'க்களைக் கேலி செய்த காலமுமுண்டு. இப்போது, மீண்டும் இளைய தலைமுறையினருக்கு அவற்றைக் குறைவின்றிச் செய்ய வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கிறது. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

ஆனால், நாகரிகத்தின் பாதிப்பால், அந்தக் கர்மாகளைச் செய்ய உதவியவர்கள் வெவ்வேறு தொழில்களுக்கு மாறிவிட, அவற்றை 'எப்படி முறையாகச் செய்வது?' என்பதே இப்பொழுது கேள்விக் குறியாகி விட்டது.

இதையறிந்து அந்தக் குறையைப் போக்கும் விதமாக மதிப்பிற்குரிய குஹஸ்ரீ மல்லாஜி வெ. இரத்தின சர்மா அவர்கள் இந்நூலைத் தொகுத்தளித்துள்ளார்கள்.
1970 களில் இவர்  உரை எழுதிய மற்றும் இயற்றிய நூல்கள்,

1. பாஹுலேய புஜங்கம்
2. சாஸ்த்ருச்துதி ஷட்கம்
3. பவனசுத பஞ்சரத்னம்
4. ஸ்வர்ணதாராச்தவம்
5. மஹா கணேச பஞ்சரத்னம்
6. சுப்ரமந்ய ஸுப்ரபாதம்
7. ஸ்கந்த ரத்ன பஞ்சகம்
8. ஆக்னேய ஆர்த்தி
9., வினாசனச்தவம்
10. சுவாமிநாத ஸ்தவம்
11.  ஸ்வாமிநாத சப்தகம்
12. ஸ்கந்த சத்குரு சப்தகம்
13. லவலீச லஹரீ
14.  வைத்யநாத ஸ்தவம்
15. குஹ கீதா
16. ஆபஸ்தம்ப அபர ப்ரயோகம்
17. ஆபஸ்தம்ப பூர்வ ப்ரயோகம்
18. ஆபஸ்தம்ப ச்ராத்த ப்ரயோகம்
19. ஆபஸ்தம்ப தர்ச தர்ப்பணம்
20. சஷ்டியப்த, பீமரத, சதாபிஷேக சாந்தி
21. நவக்ரஹ பீடா நிவாரணி.

இவற்றில், கடைசி ஆறு நூல்களும் தற்போது பயனீர் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் வெளியிடப்பட்டு வாசகர்களுக்குக் கிடைக்கின்றன.

ஆன்மிகத்தில் ஆர்வம் மிகுந்த இவர் இறைப்பணிக்காக இன்னும் ப்ரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இவர், திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் வெகு காலமாக சம்ஸ்க்ருதம் சொல்லித்தரும் பணியை சேவையாகச் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Namaskaram. I have Abassthamba Sraartha Prayogam (Andra paththathi)...Is there any such book for Tamilnadu paththathi? If so, pl.send me reply to venugpl60@gmail.com.
    Thanking you
    K.Venugopal.

    ReplyDelete